2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க மத்திய மந்திரிகள் அமெரிக்கா பயணம்
2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியா-அமெரிக்கா இடையே வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி 2+2 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், ஏப்ரல் 11 ஆம் தேதி அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின், வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இதில் இந்தியா-அமெரிக்கா இடையிலான வெளியுறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த மாதம் இந்தியா-ஜப்பான் இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.இதையொட்டி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்ல உள்ளனர்.
Related Tags :
Next Story