டெல்லி: ஓராண்டில் கொரோனா விதிமீறலுக்காக ரூ.154 கோடி அபராதம்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 April 2022 9:36 AM IST (Updated: 9 April 2022 9:36 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஓராண்டில் கொரோனா விதிமீறலுக்காக ரூ.154 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில், கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி முதல் இம்மாதம் 6-ந் தேதிவரை கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக டெல்லி அரசு ரூ.154 கோடி அபராதம் விதித்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இதில் ரூ.16 கோடியே 79 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. பொது இடங்களில் முககவசம் அணியாததற்காகத்தான் பெரும்பாலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமீறலுக்காக மேற்கண்ட காலகட்டத்தில் 37 ஆயிரத்து 809 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொது இடங்களில் முககவசம் அணியாததற்காக இனிமேல் அபராதம் விதிக்கப்படாது என்று கடந்த வாரம் டெல்லி அரசு அறிவித்தது. இருப்பினும், தொடர்ந்து முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளது.

Next Story