ஜம்மு காஷ்மீரில் நீடிக்கும் சண்டை; என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை!
ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகரில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.மேலும் ஒருவன் சிக்கியுள்ளதாக காஷ்மீர் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் தரப்பில் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:-
“ஸ்ரீநகர் என்கவுன்டரில், சமீபத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான்.மேலும் ஒருவன் சிக்கியுள்ளான். என்கவுண்டர் நடந்து வருகிறது; போலீஸ் ஐ.ஜி, காஷ்மீர்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
J&K | One terrorist killed in an encounter that started in Srinagar this morning. Operations by Police and CRPF are still underway.
— ANI (@ANI) April 10, 2022
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/KRFG0Ydf0i
Related Tags :
Next Story