முடக்கப்பட்ட உத்தரபிரதேச அரசின் ‘டுவிட்டர்’ பக்கம் மீட்பு..!!
உத்தரபிரதேச முதல்-மந்திரி அலுவலக பக்கத்தை தொடர்ந்து, அந்த மாநில அரசின் ‘டுவிட்டர்’ பக்கமும் முடக்கப்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கம், கடந்த சனிக்கிழமை சுமார் அரை மணி நேரம் விஷமிகளால் முடக்கப்பட்டது.
இந்தநிலையில், உத்தரபிரதேச மாநில அரசின் ‘டுவிட்டர்’ பக்கம் நேற்று முடக்கப்பட்டது. அதை இயக்கி வந்த மாநில தகவல் துறையின் ‘டுவிட்டர்’ பக்கமும் சிறிது நேரம் முடக்கப்பட்டது.
10 நிமிடத்துக்கு பிறகு 2 பக்கங்களும் மீட்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் குறித்து லக்னோ சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story