மத்திய பிரதேசத்தில் திருமண வீட்டில் தீ விபத்து - 12 பேர் காயம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 April 2022 3:48 AM IST (Updated: 18 April 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.

தமோ,

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஷிகார்புரா பிபாரியா கிராமத்தில், நேற்று திருமணம் ஒன்று நடந்தது. இந்த வீட்டில் நேற்று காலையில் விருந்தினர்களுக்கு வழங்குவதற்கான உணவு பொருட்கள் தயாராகிக்கொண்டு இருந்தது. அப்போது, சமையல் நடந்து கொண்டிருந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒருவர் பெட்ரோலை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, தீ பிடித்தது.

இதில் சமையல் நடந்த இடம் மற்றும் பந்தல் முழுவதும் தீ பரவியது. இந்த தீயில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமோ மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story