“நீட் தேர்வு வயது வரம்பு நீக்கம்” - சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தகவல்


“நீட் தேர்வு வயது வரம்பு நீக்கம்” - சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தகவல்
x
தினத்தந்தி 19 April 2022 5:10 PM GMT (Updated: 19 April 2022 5:10 PM GMT)

நீட் இளநிலை தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நீட் இளநிலை தேர்வு எழுதுபவர்களுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 வயது, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயது வரை இருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

இன்று நடைபெற்ற விசாரணையின் போது தேசிய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் இளநிலை தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், தேசிய மருத்துவ கவுன்சில் கூட்டத்தில் நீட் இளநிலை தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை வலியுறுத்தப்போவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story