டெல்லி: ரெயில்வே குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!!


டெல்லி: ரெயில்வே குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!!
x
தினத்தந்தி 24 April 2022 11:00 PM IST (Updated: 24 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

வடக்கு டெல்லியில் உள்ள ரெயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி, 

வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டியில் உள்ள ரெயில்நிலையம் அருகே உள்ள வடக்கு ரெயில்வேயின் சிக்னல் மற்றும் டெலிகாம் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மிகவும் பயங்கரமாக பரவியதால் பல கிலோமீட்டர் தூரம் கரும் புகை பரவியது. 

தகவலின் பேரில் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இவ்விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கர்க் கூறுகையில், “பிரதாப் நகர் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சப்ஜி மண்டியில் உள்ள ரெயில்வே குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4:25 மணியளவில் அழைப்பு வந்தது. மொத்தம் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்று தெரிவித்தார்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ரெயில் நிலைய எல்லைக்கு வெளியே, பயணிகள் பகுதியிலிருந்து விலகி நடந்தது. இதனால் ரெயில்களின் இயக்கம் அனைத்தும் வழக்கம் போல் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 



Next Story