காங்கிரஸ் கட்சியின் இமாச்சல பிரதேச தலைவராக முன்னாள் முதல் மந்திரியின் மனைவி நியமனம்..!
காங்கிரஸ் கட்சியின் இமாச்சல பிரதேச தலைவராக முன்னாள் முதல் மந்திரியின் மனைவி பிரதீபா வீர்பத்ர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிம்லா,
இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பிரதீபா வீர்பத்ர சிங்கை காங்கிரஸ் நியமித்துள்ளது.
பிரதீபா வீர்பத்ர சிங் மறைந்த இமாச்சல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவிவார். இவர் மண்டி தொகுதியின் மக்களவை எம்.பி.யாக உள்ளார். இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாஜக 43 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story