டெல்லியில் கொரோனா அதிகரித்தாலும் கடுமை இல்லை: சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2022 1:07 AM IST (Updated: 29 April 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்தாலும், கடுமையான நோய் இல்லை என்று சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

டெல்லியில் இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 1,155 பேர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்திக்கொண்டுள்ளனர். 7 லட்சத்து 18 ஆயிரத்து 788 பேர் முன்எச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) செலுத்திக்கொண்டுள்ளனர்.

ஆனாலும் அங்கு தற்போது தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகத்துக்கொண்டே செல்கிறது. தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது 4,832 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்தாலும், நோய் கடுமையாக இல்லை. ஆஸ்பத்திரி சேர்க்கை குறைவாகவே உள்ளது. தடுப்பூசிகளாலும், இயற்கையான தொற்றாலும் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தி காரணமாக, ஆஸ்பத்திரி சேர்க்கை குறைவாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு கொரோனா வந்தாலும் பதற்றம் அடைய அவசியம் இல்லை. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தொற்று விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதையும், குழந்தைகள் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் இல்லை என்பதையும் செரோ ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே நிலைமை மோசமாக இல்லை.

முன்பு டெல்லியில், 5,000 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறபோது, 1000 பேர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டியது இருந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்காக 9,390 படுக்கைகள் உள்ளன. ஆனால் 148 நோயாளிகள்தான் (1.58 சதவீதம்) படுக்கைகளில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

Next Story