நவி மும்பையில் கோவில் கட்ட ரூ.500 கோடி மதிப்பிலான நிலம் - திருப்பதி தேவஸ்தானத்திடம் வழங்கியது மராட்டிய அரசு


நவி மும்பையில் கோவில் கட்ட ரூ.500 கோடி மதிப்பிலான நிலம் - திருப்பதி தேவஸ்தானத்திடம் வழங்கியது மராட்டிய அரசு
x
தினத்தந்தி 1 May 2022 5:23 AM IST (Updated: 1 May 2022 5:23 AM IST)
t-max-icont-min-icon

நவி மும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திடம் மராட்டிய அரசு வழங்கியது.

மும்பை,

மராட்டிய மாநிலம், நவி மும்பையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை மராட்டிய மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் நேற்று வழங்கினார்.

மேலும் மராட்டிய மாநில அரசு வழங்கிய நிலத்தில் கோயில் கட்ட ரூ.50 கோடி முதல் ரூ.60 வரை செலவாகும் என கூறப்படும் நிலையில், கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்று கொள்வதாக ரேமாண்ட் குழுமம் தெரிவித்துள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நவி மும்பையில் உள்ள உல்வேயில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியதற்காக மராட்டிய மாநில அரசுக்கும், கோவில் கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்க முன் வந்ததற்காக ரேமண்ட் குழுமத்திற்கும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நன்றி தெரிவித்தார்.

Next Story