தமிழக அரசு வழங்கும் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும்: வெளியுறவுத்துறை மந்திரி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 May 2022 9:15 PM IST (Updated: 1 May 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு உதவுவது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

இலங்கையில் வரலாறு கானாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு அனுப்ப தயாராக உள்ளது. 

தமிழக அரசு உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசு வசதி செய்து தர வேண்டும் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முன்வந்த தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு வழங்கும் உதவிப்பொருட்களை வெளியுறவு அமைச்சகத்தில் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story