கொரோனா தொற்று அதிகரிப்பு: டெல்லி ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அதிகரிப்பு
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக டெல்லி ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இத்தொற்று நோயாளிகளுக்கான 2 ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 250-ல் இருந்து 450 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 100-ல் இருந்து 178 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 100-ல் இருந்து 400 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு இதற்கு முன்பு கொரோனை தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஏதும் இல்லாதநிலையில், தற்போது புதிதாக 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது டெல்லி ஆஸ்பத்திரிகளில் 154 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 ஆயிரத்து 358 பேர் வீடுகளில் தனிமையில் உள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story