விருந்து நிகழ்ச்சியில் ராகுல் காந்தி: வீடியோ வைரலான நிலையில் காங்கிரஸ் விளக்கம்
திருமண விழாவில் கலந்து கொள்வதில் நமது நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நிற்பதும் அவரை சுற்றியுள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில், தான் ராகுல் காந்தி நைட் கிளப் ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேபாளத்திற்கு நேற்று சென்ற ராகுல் காந்தி, தனது நண்பர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ,ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ள மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, “ முழு நேர சுற்றுலாப்பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர்’. பயணம் முடிந்து நேரம் கிடைக்கும் போது, போலி கதைகளையும் குற்றச்சாட்டுகளையும் உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்” என்று சாட்டியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முக்தர் அப்பாஸ் நக்வி மேலும் கூறுகையில், ராகுல் காந்தியின் கருத்துக்கள் நாட்டு மக்கள் மட்டு இல்லை. அவரது கட்சியினரையே தவறாக வழிநடத்துகிறது. ராகுல் காந்தி இதே பாதையில் சென்றால் நிலைமை இப்படித்தான் இருக்கும்” என்றார்.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, நமது நட்பு நாடான நேபாளத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அவரது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது நமது கலாசாரங்களில் ஒன்றாகும். திருமண விழாவில் கலந்து கொள்வதில் நமது நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
साहब https://t.co/C8gKv9zVLSpic.twitter.com/VgbBc8rOhi
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) May 3, 2022
Related Tags :
Next Story