உத்தரப்பிரதேசம்: சஹாரன்பூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சஹாரன்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள சொரானா கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையின் உரிமையாளர் இந்த விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த சஹாரன்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர், அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் தீ அணைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இந்த விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story