ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப்படை - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை


ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப்படை - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
x
தினத்தந்தி 11 May 2022 1:23 PM GMT (Updated: 2022-05-11T18:53:50+05:30)

இன்று ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமாவில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும்  பயங்கரவாதிளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் இன்று  பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 2 என்கவுன்டர்கள் நடந்தன.

இந்நிலையில், இன்று ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமாவில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது.

முன்னதாக இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மற்றுமொரு என்கவுன்டர் நடந்தது.

தற்போது அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story