அசாமில் வெள்ளம்: 3 பேர் பலி; 25 ஆயிரம் பேர் பாதிப்பு


அசாமில் வெள்ளம்:  3 பேர் பலி; 25 ஆயிரம் பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 15 May 2022 12:49 PM IST (Updated: 15 May 2022 12:49 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் இந்த ஆண்டில் ஏற்பட்ட முதல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 25 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.




கவுகாத்தி,



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

இந்த ஆண்டில் முதல் முறையாக ஏற்பட்டு உள்ள இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட 94 கிராமங்களை சேர்ந்த மொத்தம் 24,681 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1,732.72 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன என அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.


Next Story