ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு ‘சீட்’ - காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம்
கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்குவது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்குவது என்று காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
உதய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர் அமர்வு மாநாட்டில், குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்கள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், மாநாட்டின் இறுதியில் ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படும். அதே குடும்பத்தில் இன்னொருவருக்கு டிக்கெட் வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அவர் கட்சிக்காக பணியாற்றி இருக்க வேண்டும்.
‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையும் பின்பற்றப்படும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் தொடரக்கூடாது. புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்.
கட்சியின் அனைத்து மட்டங்களிலும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 50 சதவீத பதவிகள் அளிக்கப்படும்.
கட்சியில் 3 புதிய துறைகள் உருவாக்கப்படும். பொது உட்கட்சி ஆய்வு, தேர்தல் நிர்வாகம், தேசிய பயிற்சி என்ற 3 துறைகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story