இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட தாஜ்மஹாலில் உள்ள பாதாள அறைகளின் படங்கள்!


இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட தாஜ்மஹாலில் உள்ள பாதாள அறைகளின் படங்கள்!
x
தினத்தந்தி 16 May 2022 4:01 PM GMT (Updated: 16 May 2022 4:01 PM GMT)

தொல்லியல் துறை இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தாஜ்மஹாலின் நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை பார்க்கலாம்.

புதுடெல்லி,

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மூடிய 22 அறைகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இப்போது இந்திய தொல்லியல் துறை, தாஜ்மஹாலின் சில அறைகளின் படங்களை வெளியிட்டுள்ளது. இவை சமீபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்த இடம். இந்திய தொல்லியல் துறையின் ஜனவரி 2022 அறிக்கையின் 20 வது பக்கத்தில்  தாஜ்மாஹாலில் அரிக்கப்பட்ட மற்றும் சிதைந்த சுண்ணாம்பு பூச்சு அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பூட்டிய 22 அறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இந்த அறைகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளின் படங்களை வெளியிட்டு பதற்றத்தைத் தணிக்க முயன்றுள்ளது.

தொல்லியல் துறை இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தாஜ்மஹாலின் நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை பார்க்கலாம் என்று தொல்லியல் துறை ஆக்ரா பிரிவின் தலைவர் ஆர் கே படேல் தெரிவித்தார்.

பூட்டப்பட்டுள்ள இந்த அறைகளைத் திறப்பதற்காக, பாஜகவின் ரஜ்னிஷ் குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூடிய அறைகளில் பூச்சு மற்றும் சுண்ணாம்பு அலமாரி உட்பட விரிவான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அறைகளின் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.6 லட்சம் செலவிடப்பட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


Next Story