6-வது முறை சோதனை : கார்த்தி சிதம்பரம்


6-வது முறை சோதனை : கார்த்தி சிதம்பரம்
x
தினத்தந்தி 17 May 2022 1:28 PM IST (Updated: 17 May 2022 1:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். , மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள் .எனக்கு அது நினைவில்லை என்று டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார் .

தற்போது, எனது அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது .2015ல் இரண்டு முறை ,2017ல் ஒரு முறை ,2018ல் இரண்டு முறை ,இன்று,என 6 வது  முறை சோதனை நடைபெறுவதாக  கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் .

Next Story