கேரளாவில் கொட்டும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


கேரளாவில் கொட்டும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 17 May 2022 5:13 PM IST (Updated: 17 May 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொட்டும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


திருவனந்தபுரம்,

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கோட்டயம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

இந்த சூழலில், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கனமழை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story