நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜகவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி


நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜகவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 17 May 2022 2:23 PM GMT (Updated: 17 May 2022 2:23 PM GMT)

பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

புதுடெல்லி,

பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் வலுப்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு அழித்துக்கொண்டிருக்கிறது. நாட்டை மத அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் பிளவுபடுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவதுதான் எனது இலக்கு. 

நம் நாட்டில் வெறுப்பும், கோபமும், வன்முறையும் பரப்பப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை என்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“பொது பிரச்சினைகள் - வருவாய், பணவீக்கம். பா.ஜ.க பிரச்சினைகள் - கலவரங்கள், சர்வாதிகாரம்.

நாடு முன்னேற வேண்டுமென்றால், பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும். நாம் ஒன்றுபட்டு இந்தியாவை இணைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story