தலைநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் யமுனை ஆறு வற்றத் தொடங்கியதால் தண்ணீர் விநியோகம் பாதிப்பு!


தலைநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் யமுனை ஆறு வற்றத் தொடங்கியதால் தண்ணீர் விநியோகம் பாதிப்பு!
x
தினத்தந்தி 17 May 2022 3:45 PM GMT (Updated: 17 May 2022 3:45 PM GMT)

ஆற்றின் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு வரும் வரை நீர் விநியோகம் பாதிக்கப்படும்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் யமுனை ஆறு வற்றத் தொடங்கியது. கடும் வெயில் மற்றும் அரியானாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் போதிய நீர் இருப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமுனையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், சந்திரவால், வஜிராபாத் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் உற்பத்தி சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, டெல்லியின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

மேலும், ஆற்றின் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு வரும் வரை நீர் விநியோகம் பாதிக்கப்படும். ஆகவே, கடும் கோடையால் அவதிப்படும் குடியிருப்புவாசிகள், தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என்று டெல்லி நீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் 150 கனஅடி நீரை ஆற்றில் திறந்து விடுமாறு கோரி அரியானா நீர்பாசனத் துறைக்கு மே 12ஆம் தேதி டெல்லி நீர் வாரியம் கடிதம் எழுதியிருந்தது.

அரியானாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைவாக உள்ளது. ஆற்றில் நேரடியாகவும் மற்ற ஆதாரங்கள் மூலமாகவும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது. கோடையில் தேவை அதிகமாக உள்ளது, தற்போது ஆறு வறண்டு கிடப்பதால் வரத்து குறைந்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story