22 பேர் உயிரை பறித்த கேரள படகு விபத்து - மேலும் ஒருவர் கைது


22 பேர் உயிரை பறித்த கேரள படகு விபத்து - மேலும் ஒருவர் கைது
x

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

கோழிக்கோடு,

கேரளா மாநிலம் மலப்புரம் தனூரில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

படகு உரிமையாளர் நாசர் உட்பட அனைவரும் 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு திரூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். படகின் உரிமையாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படகு தொடர்பான துறைமுகத் துறையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story