மும்பையில் புதிதாக 23 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி


மும்பையில் புதிதாக 23 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி
x

மராட்டியத்தின் மும்பையில் புதிதாக 23 பேருக்கு தட்டம்மை பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.



மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் புதிதாக 23 பேருக்கு தட்டம்மை பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என மும்பை மாநகராட்சி அறிவிப்பு தெரிவிக்கின்றது. சமீபத்தில் கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டமை பாதிப்பு அதிகரித்த சூழலில் ஆய்வு பணி மேற்கொள்ள மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மத்திய குழுக்கள் சம்பவ பகுதிக்கு நேரிடையாக சென்று பார்வையிடுவதுடன், நோய் பரவல் பற்றி ஆய்வு பணி மேற்கொள்ளும். மாநில சுகாதார துறைகளுடன் இணைந்து பணியாற்றி, பொது சுகாதார விசயங்கள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுக்கு வேண்டிய உதவிகளையும் செய்யும் பணியில் ஈடுபடும்.

கேரளாவில் தட்டம்மை பரவல் ஏற்பட்டு மலப்புரத்தில் நேற்று 160 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டுமென்று, கேரள அரசும் வலியுறுத்தி உள்ளது. ஏனெனில் தட்டம்மை குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.

இதேபோன்று மத்திய சுகாதார அமைச்சகமும், பிறந்து 9 மாதம் முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூடுதல் தடுப்பூசிகளை செலுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் பரிசீலனை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டது.

மராட்டியத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்வரை மொத்தம் 717 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதியாகி இருந்தது. இவற்றில், மும்பையில் எண்ணிக்கை 303 ஆக இருந்தது. மொத்தம் 14 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்நிலையில் இறப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் இந்த ஆண்டில் தொற்று ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களின் எண்ணிக்கை 3,500-க்கும் கூடுதலாக அதிகரித்து உள்ளது. 24 வார்டுகளில் 37 பேருக்கு பரவல் தெரிய வந்துள்ளது.

மும்பை மாநகராட்சி அறிவிப்பின்படி, புதிதாக 45 நோயாளிகள் மும்பை மருத்துவமனைகளில் இன்று சேர்ந்து உள்ளனர் என தெரிவிக்கின்றது. இந்த சர்வேயில், பாதிப்பு ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களின் எண்ணிக்கை 83 என்றும் தெரிய வந்துள்ளது.

காய்ச்சல், தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் ஏ இரண்டு டோஸ்கள் கொடுக்கப்படுகின்றன. 24 மணிநேரத்திற்கு பின்னர் 2-வது டோஸ் கொடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story