சூடானில் இருந்து 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளதாக தகவல்


சூடானில் இருந்து 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளதாக தகவல்
x

உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து இன்று மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளனர்.

மும்பை,

உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வர உள்ளனர். ஆபரேஷன் காவேரி'மூலம் நேற்று 360 பேர் தாயகம் திரும்பிய நிலையில் இன்று மேலும் 274 பேர் இந்தியா வருகின்றனர்.


Next Story