வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,500.. சத்தீஸ்கரில் இன்று முதல் அமல்


வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,500.. சத்தீஸ்கரில் இன்று முதல் அமல்
x

கோப்புப்படம் 

நடப்பாண்டில் வேலை கிடைக்காவிடில் அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர்,

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகெல், கடந்த 6ஆம் தேதி வேலையில்லா இளைஞர்களுக்கான மாத உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தார்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

12ஆம் வகுப்பு படித்தோருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த தொகை, நடப்பாண்டில் வேலை கிடைக்காவிடில் அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



1 More update

Next Story