பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 - ஒடிசா அரசு அறிவிப்பு


பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000   - ஒடிசா அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2024 6:05 PM IST (Updated: 13 March 2024 6:34 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புவனேஸ்வர்,

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேருக்கு பத்ம ஸ்ரீ, 11 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 4 பேருக்கு பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் ஜனாதிபதியிடம் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் கவுரவ நிதி வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி வருகிற ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story