திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த 25,000 கடைகள் மூடல்: ம.பி. முதல் மந்திரி தகவல்
மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் இறைச்சி, மீன், முட்டைகளை திறந்த வெளியில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி மோகன் யாதவ் கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், உஜ்ஜைனியில் ரூ. 218 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த முதல் மந்திரி மோகன் யாதவ், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் தடையின்றி நடைபெறும் என்று கூறினார்.
மேலும், மாநிலத்தில் கடந்த 25 நாட்களில் திறந்த வெளியில் இறைச்சி, மீன்கள் விற்பனை செய்த 25 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story