உத்தரப்பிரதேசம்: 3 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது


உத்தரப்பிரதேசம்: 3 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது
x

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

கான்பூர்,

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ராஜ்குமார் துபே என்ற நபர், தனது வீட்டில் தகராறு செய்துள்ளார். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அவரது மகன் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார்.

பின்னர் போலீசார், இது குறித்து விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது, திடீரென தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் துபே, போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் காயமடைந்தனர். குடும்பத்தகராறு மற்றும் மன உளைச்சலின் காரணமாக அவர் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய துபேவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story