கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - 5 பேர் மாயம்


கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - 5 பேர் மாயம்
x

மத்தியப் பிரதேசத்தில் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

மொரேனா,

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சில்வாடா கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள கைலா தேவி மந்திர் கோவில் திருவிழாவிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அந்த குழுவினர் நேற்று காலை மொரேனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து அதை நடந்து கடக்க முயன்றனர். அப்போது அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பத்து பேர் பாதுகாப்பாக நீந்திச் சென்று கரையேறினர். இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

மீட்பு படையினர் அந்த குழுவைச் சேர்ந்த இருவரின் உடல்கள் உட்பட 3 உடல்களை மீட்டுள்ளனர். மற்றொரு உடலில் முகம் சிதைந்திருந்தது. முதலைகள் கடித்திருக்கலாம் என்றும் அந்த உடலை அடையாளம் காண முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் அவர்களின் குழுவைச் சேர்ந்தவர் இல்லை என்று உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமல் போன 5 பேரை போலீசார் மற்றும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.


Next Story