பயங்கரவாத திட்டங்களுடன் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது


பயங்கரவாத திட்டங்களுடன் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
x

கைது செய்யப்பட்ட 3 பேரும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு படை போலீசார், நேபாள நாட்டின் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மூவரும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்தியா-நேபாளம் எல்லை வழியாக பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தும் திட்டத்துடன் நுழைய இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்ததாகவும், இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த முகமது அல்தாப் பட், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த சையீது கஜ்பாபார், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நசீர் அலி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேபாள எல்லை வழியாக போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்கள் நுழைய முயன்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story