விபத்தில் 3 பேர் பலி: லாரி டிரைவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை


விபத்தில் 3 பேர் பலி: லாரி டிரைவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 2022-09-23T00:30:40+05:30)

விபத்தில் 3 பேர் பலி வழக்கில் லாரி டிரைவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மங்களூரு;


மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் பத்ரே பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக சூரத்கல் போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் பரமேஸ்வர் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அப்போது பரமேஸ்வர் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.7,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.


Next Story