மத்தியபிரதேசத்தில் அரசு ஊழியரின் '3 மனைவிகள்' பஞ்சாயத்து தேர்தலில் போட்டி தகவலை மறைத்ததற்கு நடவடிக்கை


மத்தியபிரதேசத்தில் அரசு ஊழியரின் 3 மனைவிகள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டி தகவலை மறைத்ததற்கு நடவடிக்கை
x

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் தியோசார் ஜன்பத் பஞ்சாயத்தில் செயலாளராக பணிபுரிபவர், சுக்ராம் சிங்.

இவரது '3 மனைவிகள்', நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் இருவர், ஒருவரை ஒருவர் எதிர்த்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், மற்றொரு மனைவி பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

பஞ்சாயத்து செயலாளர் சுக்ராம் சிங், தனது இரு மனைவிகள் போட்டியிடுவதை பஞ்சாயத்து மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறைக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் 3-வது மனைவி போட்டியிடுவதை அவர் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்கும்படி சுக்ராம் சிங்குக்கு தியோசார் ஜன்பத் பஞ்சாயத்து தலைமை செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அரசு ஊழியரை பணியிடைநீக்கம் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story