அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்கள் பாலியல் பலாத்காரம்


அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்கள் பாலியல் பலாத்காரம்
x

அதன்பின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களின் கைகளை கட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் சத்தம் போடவில்லை. பின்னர் அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களையும், அவர்கள் கண்முன்னே கற்பழித்துள்ளனர்.

அதன்பின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

கணவன் மனைவி வசித்து வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரை கடத்த முயன்றுள்ளது. அப்போது உடல்நலம் சரியில்லாத மனைவி, தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் கும்பலால் அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும், கடத்தப்பட்ட அவரது கணவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் செயல்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


Next Story