சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை - ஐகோர்ட்டு உத்தரவு
குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்றதாக சேகர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
சென்னை,
மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் சென்னை அசோக் நகரில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 2007-2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.
இந்நிலையில் சேகர் மீது குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்று அதில் சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, சேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தனியார் நிறுவன ஏஜெண்ட் அன்வர் ஹுசன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story