போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு 300 ஜீப்புகள் வாங்க பசவராஜ் பொம்மை திட்டம்


போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு 300 ஜீப்புகள் வாங்க பசவராஜ் பொம்மை திட்டம்
x

போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு 300 ஜீப்புகள் வாங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெலகாவி:

பெலகாவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

போலீஸ் வீட்டு வசதி வாரியம் மூலம் மாநிலம் முழுவதும் காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. அந்த வாரியம் சார்பில் புதிதாக 2,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 16 போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலைய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு ரூ.80 கோடி செலவில் 300 ஜீப்புகள் வாங்கப்படுகின்றன. துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு இந்த ஜீப்புகள் வழங்கப்படும். போலீஸ் துறை நேர்மையாக பணியாற்றுகிறது. எல்லை பகுதியில் நமது பலத்தை மட்டும் காட்டுவது அல்ல. மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். எல்லையில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தடயஅறிவியல் சோதனை அறிக்கை 15 நாட்களில் வந்தால் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க உதவும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story