டெல்லி: விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை கடத்தியச்சென்ற நபர் அதிரடி கைது


டெல்லி: விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை கடத்தியச்சென்ற நபர் அதிரடி கைது
x

கோப்புப்படம் 

டெல்லியில் விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை கடத்தியச்சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

புதுடெல்லி,

மேற்கு டெல்லியின் மாயாபுரி பகுதியில் இருந்து இரண்டு குழந்தைகளை கடத்தியதாக 31 வயது நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் காரை சுத்தம் செய்யும் வேலை செய்யும் அஜய் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகள் - ஐந்து வயது சிறுவன் மற்றும் இரண்டு வயது சிறுமி மாயாபுரி பகுதியில் தங்கள் வீட்டின் அருகே நேற்று மதியம் 2.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.

பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரு குழந்தைகளையும் கடத்திய நபரை கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடமிருந்த குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தைகளை கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story