ஜம்மு காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுக்காக 36 போலீசாருக்கு முன்கூட்டியே ஓய்வு
ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 36 போலீசாருக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 36 காவலர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 36 காவலர்களுக்கு அரசு இன்று முன்கூட்டியே ஓய்வு கொடுத்துள்ளது. இந்த பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாத வகையிலும், நிறுவப்பட்ட நடத்தை விதிகளை மீறும் வகையிலும் தங்கள் கடமைகளை செய்தனர்," என்று அவர் கூறினார்.
"இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், கணிசமான காலம் பணி நேரங்களில் வராமல் இருந்துள்ளனர் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Related Tags :
Next Story