உ.பி: டிரக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!
உத்தரப்பிரதேசத்தில் டிரக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள தல்பேஹாட் காவல் நிலையப் பகுதியில் இன்று காலை டிராக்டரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்
Related Tags :
Next Story