சிக்கிம் மாநிலத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
காங்டாக்,
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மெயாங் கோலா பகுதியில், கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த காரில் சென்று கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
இதில் ரமேஷ் சந்திர வர்மா(28) மற்றும் வந்தனா(32) இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சோனம் லெப்சா(38) மற்றும் லக்பா டார்ஜி(28) இருவரும் சுங்தாங் பஜார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story