டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது


டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது
x

டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைதுசெய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இரண்டு நடைபாதை வியாபாரிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4.2 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இந்த போதைப்பொருள் சர்வதேச சந்தையில் ரூ.21 கோடி மதிப்புடையது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்ட போதைப்பொருளை சப்ளை செய்துவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story