ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 May 2023 4:13 PM IST (Updated: 5 May 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த வீரர்கள் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று வீரர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிழந்தனர். இதன் மூலம் ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


Next Story