பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதியில் 5 நாட்கள் தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 20-ந்தேதியில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 5 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி புஷ்கரணியை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தெப்ப உற்சவம் நடைபெறும் இந்த 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story