இந்திய கடற்படைக்கு புதிதாக 5 உதவி போர்க்கப்பல்கள்; ரூ.19,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்


இந்திய கடற்படைக்கு புதிதாக 5 உதவி போர்க்கப்பல்கள்; ரூ.19,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 27 Aug 2023 2:42 PM IST (Updated: 27 Aug 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்கள் தயாரிக்க எச்.எஸ்.எல். நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்களை தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்.எஸ்.எல்.) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த உதவி போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள எச்.எஸ்.எல். கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன. புதிதாக தயாரிக்கப்படும் 5 உதவி போர்க்கப்பல்களிலும் எதிரிகளின் கப்பல்கள், நீர்மூழ்கிகளை தகர்க்கும் அதிநவீன ஏவுகணைகள், அதிநவீன ரேடார் கருவிகளும் பொருத்தப்பட உள்ளன. அடுத்த 8 ஆண்டுகளுக்குள் கடற்படையிடம் 5 உதவி போர்க்கப்பல்களும் ஒப்படைக்கப்பட உள்ளன.

போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், உணவுப் பொருட்கள், குடிநீர், வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல உதவி போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமல் நீண்ட காலத்துக்கு கடலிலேயே முகாமிட்டிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story