5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா ரூ.340 கோடி செலவு


5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா ரூ.340 கோடி செலவு
x

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா ரூ.340 கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. அவற்றில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை தொடர்பான அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் ரூ.221 கோடி, உத்தரகாண்டில் ரூ.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூ.19 கோடி, மணிப்பூரில் ரூ.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.194 கோடி செலவிட்டதாக தெரிவித்துள்ளது.


Next Story