குஜராத்தில் 50 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு; 16 பேர் பலி


குஜராத்தில் 50 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு; 16 பேர் பலி
x

குஜராத்தில் புதிதாக பரவி வரும் சண்டிபுரா வைரஸ் தொற்றை தொடர்ந்து ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூகநல மையங்களுக்கும் இதுபற்றிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வதோதரா,

குஜராத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல்வேறு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதுபற்றி குஜராத் சுகாதார துறை மந்திரி ருஷிகேஷ் பட்டேல் கூறும்போது, ஹிம்மத்பூர் பகுதியில் 14 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். வைரசின் பாதிப்புக்கு ஆளான 3 பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

குஜராத்தில் ஒட்டுமொத்தத்தில் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூகநல மையங்களுக்கும் இதுபற்றிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, முதல்-மந்திரியும் கலெக்டர்கள், முதன்மை மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி உள்ளார்.

இந்த பாதிப்பு பற்றி அவர் மறுஆய்வு செய்ததுடன், வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story