காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் இருந்து ரஜோரி நோக்கி சென்ற பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ரஜோரி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் பிரிவில் இருந்து ரஜோரி மாவட்ட தலைமையகம் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தேரி ரால்யோட் பகுதிக்கு வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து உள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசார், ராணுவம் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திற்கு அடுத்த மண்டி என்ற பகுதியில் சாலை விபத்தில் நேற்று 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில் இன்று மற்றொரு விபத்து நடந்துள்ளது.
Related Tags :
Next Story