இமாசலபிரதேசத்தில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்


இமாசலபிரதேசத்தில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
x

இமாசலபிரதேசத்தில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சிம்லா,

இமாசலபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (எஸ்.டி.எம்.எ) இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா கூறுகையில்,

சம்பா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாரேடி, கோடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 6 பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 8 நடை மேம்பாலங்கள், ஒரு பசு கொட்டகை ஆகியவையும் அடித்துச் செல்லப்பட்டன. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழு உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

சிர்மௌர் மற்றும் குலு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். ஷில்லாய் தெஹ்சில் காங்டோலி மற்றும் ஹெவ்னா கோயில் அருகே நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 707 போக்குவரத்துக்கு தடை செய்யபட்டுள்ளது என்றார்.


Next Story