63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் கணினி மயம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்


63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் கணினி மயம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x

63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடியில் கணினி மயமாகின்றன. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினிமயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த தகவல்களை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர், "இந்த திட்டத்தினால் 13 கோடி விவசாயிகள் குறிப்பாக சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் பலன் அடைவார்கள். இணைய பாதுகாப்பு, தரவுகள் சேமிப்பு வசதிகளுடன், பொதுவான மென்பொருள் கொண்டதாகவும், வன்பொருள் ஆதரவுடனும் இந்த கணினிமய திட்டம் இருக்கும்" என்றும் தெரிவித்தார். "தற்போதைய பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கவும் இது வழிவகை செய்யும்" என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை நீக்குவது என பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் ஒதுக்கீட்டையும், அக்டோபர் 1-ந் தேதி முதல் நிறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து ஆய்வு, உற்பத்தியாளர்களுக்கு சந்தையிடும் சுதந்திரத்தை அளிக்கும். உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் அரசுக்கோ, அரசால் நியமிக்கப்படுவோருக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் கச்சா எண்ணெயை உள்நாட்டு சந்தையில் விற்க முடியும். எல்லா ஒப்பந்தங்களிலும் அரசுக்கு விற்பனை உரிமைக்கான பங்குத்தொகை, செஸ் வரி சீராக கணக்கிடப்படும் என தகவல்கள் கூறுகின்றன.


Next Story