உத்தரபிரதேசம்: பஸ்-கார் மோதியதில் 7 பேர் பலி
பஸ்-கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் நேற்று காா் மீது பஸ் மோதிய விபத்தில், 7 போ் உயிரிழந்தனா். 25 போ் படுகாயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
"எடாவா மாவட்டத்தின் உஸ்ராஹா் பகுதியில் உள்ள லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரேபரேலியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்த காா் மீது மோதியது. இதில், சாலையோரம் இருந்த சுமாா் 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளான பஸ்சில் சுமாா் 60 போ் பயணித்தனா். காரின் டிரைவர் வழியில் உறங்கியது தான் விபத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இதனிடையே, பஸ் டிரைவர் செல்போனை பயன்படுத்திக்கொண்டு பஸ் ஓட்டியதாக பயணி ஒருவா் தெரிவித்தாா். இந்த விபத்தில் 7 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 25 போ் படுகாயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் இருவா் பஸ்சில் பயணித்தவா் என்றும் 3 போ் காரில் பயணித்தவா்கள் என்றும் தெரியவந்தது. இருவரின் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்றாா்.